Friday, January 20, 2023

anti aging face mask : அறுபது வயதிலும் இளமை முகம் தரும் நெல்லிக்காய் தயிர் ஃபேஸ் மாஸ்க் !

 

anti aging face mask : அறுபது வயதிலும் இளமை முகம் தரும் நெல்லிக்காய் தயிர் ஃபேஸ் மாஸ்க் !


தோல் பராமரிப்பில் சருமம் வயதாவதை தடுக்க இயற்கையான முறையில் நீங்கள் பராமரிப்பு செய்ய விரும்பினால் நெல்லிக்கனி சருமத்துக்கு பல அற்புதங்களை செய்யும். நெல்லிக்காயுடன் தயிர் சேர்த்து பயன்படுத்தும் போது சருமம் வயதாவது தடுக்கப்படுகிறது. நெல்லி தயிர் ஃபேஸ் மாஸ்க் மற்றும் அதன் தயாரிப்பு முறை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.





நெல்லிக்காய் மிக மிக அற்புதமான சக்திவாய்ந்த மருத்துவ குணங்களை கொண்டது என்பது தெரியும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கும் நெல்லிக்காய் தோல் பராமரிப்பிலும் சக்தி வாய்ந்த ஒன்றாக உருவாகிவருகிறது. இது வருடம் முழுக்க எளிதாக கிடைக்க கூடியது. உங்கள் தோல் பராமரிப்பில் நெல்லிக்காய் சேர்ப்பதன் மூலம் நீங்கள் அற்புதமான சரும நன்மைகளை பெறலாம். குறிப்பாக வயதான தோற்றத்தை தவிர்க்க நெல்லிக்காய் தயிர் சேர்த்த ஃபேஸ் மாஸ்க் உங்களுக்கு பெரிதும் உதவும். எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

நெல்லிக்காய் தயிர் ஃபேஸ் மாஸ்க்





தேவை
பசுந்தயிர் - 4 டீஸ்பூன்
நெல்லிக்காய் பொடி - 2 டீஸ்பூன்

தயிர் பசுந்தயிராக கெட்டியாக இருந்தால் நல்லது. தயிர் சருமத்துக்கு இயற்கையாகவே நன்மை செய்யகூடியது. தயிர் நல்ல பாக்டீரியா, கொழுப்பு அமிலங்கள் மற்றும் லாக்டிக் அமிலம் ஆகியவற்றால் நிரம்பியுள்ளது. இது சருமத்தில் சிவப்பு, எரிச்சல் மற்றும் வெயிலில் எரிந்த சருமத்தை உடனடியாக ஆற்றும். இயன்றவரை பசுந்தயிர் கெட்டித்தயிராக இருக்கட்டும்.

நெல்லிக்காய் பொடியை வீட்டிலேயே எளிதாக தயாரிக்கலாம். நெல்லிக்காயை கொட்டை நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி உலர வைக்கவும். வெயில் படாமல் தட்டில் கொட்டி அதன் மேல் மெல்லிய துணி போர்த்தி வெயிலில் வைத்து எடுக்கலாம். நன்றாக உலர்ந்ததும் அரைத்து சலித்து பொடியாக்கி கொள்ளவும். இதை கண்ணாடி பாட்டிலில் சேமித்து வைத்து தேவையான போது பயன்படுத்தி கொள்ளலாம். நெல்லிக்காய் பொடி கடைகளிலும் கிடைக்கும். அல்லது நெல்லிக்காய் பொடி மாத்திரை வடிவில் கிடைக்கிறது. அதை வாங்கியும் பயன்படுத்தலாம். ஃபேஸ் மாஸ்க் செய்வதற்கு நெல்லிக்காய் மாத்திரை பயன்படுத்துவதாக இருந்தால் 2 மாத்திரைகள் பயன்படுத்தலாம்.

முகத்துக்கு ஃபேஸ் மாஸ்க் போடுவது எப்படி




  • சிறிய கிண்ணத்தில் தயிர் எடுத்து அதில் நெல்லிக்காய் பொடியை சிறிது சிறிதாக கலக்கவும். பேஸ்ட் பதத்துக்கு இருக்கட்டும். இதை 10 நிமிடங்கள் வைத்திருக்கவும்.
  • முகத்தில் மேக் அப் இருந்தால் அதை அகற்றவும். பிறகு சுத்தமாக வெற்றுநீரில் கழுவவும்.
  • இப்பொது தயிர் நெல்லிபொடி கலந்த கலவையை முகத்தில் கழுத்துப்பகுதியில் தடவி 15 முதல் 20 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும்.
  • முகத்தை வெதுவெதுப்பான நீரில் சுத்தம் செய்யவும். முகத்தில் குளிர்ந்த நீரை அடிக்க செய்யலாம்.
  • வாரத்தில் மூன்று நாட்கள் செய்து வந்தால் விரைவில் அற்புதமான மாற்றங்களை சருமத்தில் பார்க்கலாம்.

வயதான தோற்றத்தை தள்ளிப்போட நெல்லிக்காய் உதவுமா?




நெல்லிக்காய் தோல் பராமரிப்பு நன்மைகளை அளிப்பதிலும் சிறப்பாக செயல்படுகிறது, மேலும் இதன் வயதான எதிர்ப்பு நன்மைகள் நவீன அறிவியலால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. நெல்லிக்காய் மேற்பூச்சாக சருமத்துக்கு பயன்படுத்தும் போது இது சருமத்தில் கொலாஜன் அதிகரிக்கும். இந்த கொலாஜன் சருமத்துக்கு அதிக உயிர் கொடுக்க கூடியவை.

நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி, ஹைப்பர் பிக்மெண்டேஷன் போன்ற வயதான அறிகுறிகளை எதிர்த்து போராட உதவுகிறது. இது ஆக்ஸிஜனேற்றத்தின் சிறந்த மூலமாக இருப்பதால் உடலில் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராட செய்கிறது. மேலும் சருமத்தை இளமையாகவும் அழகாகவும் வைத்திருக்கவும் செய்கிறது. தோல் நிறத்தை மேம்படுத்துகிறது. ஆயுர்வேதத்தில் நெல்லிக்காய் ஆரோக்கியம் மற்றும் அழகு வைத்தியங்களுக்கு பயன்படுத்தப்படுவதால் இது அதிக மதிப்பை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நெல்லிக்காயை நேரடியாக முகத்தில் தடவலாமா?




நெல்லிக்காயை சாறெடுத்து முகத்தில் பயன்படுத்த கூடாது. இது எரிச்சலை உண்டு செய்யும். குறிப்பாக உணர்திறன் வாய்ந்த சருமம் உள்ளவர்களுக்கு இது அதிக பாதிப்பை உண்டு செய்யலாம்.
நெல்லிக்காயை எப்போதும் பொடியாக்கி மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதிலும் தேன், கற்றாழை, தயிர் போன்ற பொருள்களை கலந்து பயன்படுத்தினால் சருமம் பாதிக்காது.

No comments:

Post a Comment

Virat Kohli’s Fitness Secrets Revealed by Anushka Sharma

    Virat Kohli’s Fitness Secrets Revealed by Anushka Sharma         Here is the conceptual illustration inspired by the theme of fitness an...